கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் நேற்று காலை 10:30 மணி முதல் நேரில் விசாரணை நடத்தினர். பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு அமைப்பினர், வணிகர் சங்கத்தினர், தவெக மாவட்ட செயலாளரின் மனைவி உட்பட 30 பேரிடம் மனுக்களைப் பெற்றனர். நேற்று மனு அளிக்க வந்த சுமார் 7 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.