கரூர்: கடுமையான இருமலுடன் கீழே விழுந்த முதியவர் உயிரிழப்பு

கரூர் மாவட்டம் புகலூர் அருகே ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த 54 வயதான அப்பாவு, சில நாட்களாக கடுமையான இருமலாால் அவதிப்பட்டு வந்தார். நேற்று வீட்டில் இருமல் ஏற்பட்டபோது தவறி கீழே விழுந்த அவரை, கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி பூங்கொடி அளித்த புகாரின் பேரில், க. பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி