இந்த நிகழ்ச்சியில் ஆண்டான் கோவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி கலந்து கொண்டார். தாந்தோணி மேற்கு ஒன்றிய விவசாய அணி சார்பில் விவசாயிகளுக்கு சுமார் நூறு தென்னங்கன்று விவசாயிகளுக்கு வழங்கினர். மேலும், கோவிந்தம் பாளையம், ஆத்தூர் பிரிவு, மருத்துவர் நகர் போன்ற இடங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி மேற்கு ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் அம்பிகை செந்தில், கிளைக் கழகச் செயலாளர், மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.