கரூர்: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோஜியோ ஆர்ப்பாட்டம்

கரூர் மாநகர பகுதிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர். தலைமை எம். எஸ். அன்பழகன், மாவட்ட தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டனர். 

அரசு ஊழியர், ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தினர். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தமிழ்நாடு முதல்வர் நிறைவேற்ற வலியுறுத்தி, பத்து அம்ச கோரிக்கையை முன்வைத்தனர். காலவரையின்றி முடங்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். 

தொடர் கல்வி துறையில் பணிபுரியும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி உள்ள அரசாணை 243 ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும். மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில் ஆரோக்கிய பிரேம்குமார், மாவட்டச் செயலாளர், பார்த்திபன், வள்ளியரசன், செல்வமணி, கரூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ பல நிர்வாகிகள் கலந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி