கரூர்: அதிமுக சட்டரீதியாக எதிர்கொள்ளும் - வழக்கறிஞர் சுப்பிரமணி

கரூர் அதிமுக கரூர் மாவட்ட இணை செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளை அதிமுக சட்டரீதியாக எதிர்கொள்ளும். கரூர் மாவட்டத்தில் திமுகவை சேர்ந்த சில நிர்வாகிகள் ஆங்காங்கே மணல் குவித்து வைத்திருப்பதாக பொதுமக்கள் புகைப்படம் எடுத்து அனுப்பிய ஆதாரங்களை கரூர் மாவட்ட காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் அதிமுக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி