சட்டப்பேரவையில் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்ததால், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக கரூர் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த கமலக்கண்ணன் மா.செ.-ஆக அறிவிக்கப்பட்டார். இதனிடையே மே 15 அன்று கரூர் பழனியப்பா தெருவில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் கமலக்கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். இதையறிந்து வந்த விஜயபஸ்கர் தரப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.