கரூர்: சட்ட விரோத கல்குவாரி.. உரிமையாளர் மீது நடவடிக்கை - வி.சி.க மனு.

கரூரில் சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வி.சி.கட்சியினர் ஆட்சியரிடம் மனு.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆற்றல் அரசு என்கிற சக்திவேல் தலைமையில் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் வாராந்திர குறைதீர் கூட்டத்தில், சட்ட விரோதமாக செயல்படும் குவாரி குறித்து புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.இது தொடர்பாக சக்திவேல் செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது, கரூர் மாவட்டத்தில் ஒரு பிடி மண் கூட களவாட முடியாத அளவிற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், செயல்படக்கூடாத தோகைமலை குவாரியில் இருந்து மதுரையைச் சேர்ந்த காந்திராஜன் என்பவர் ஏற்கனவே வெட்டி வைத்த கிரானைட் கற்களையும், அரசு நிறுவனமான டாமின் வெட்டி வைத்த கற்களையும் இரவு நேரத்தில் பெங்களூர் மற்றும் தூத்துக்குடிக்கு சட்ட விரோதமாக அனுப்பி வருகிறார்கள்.இது குறித்து காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்காதது மர்மமாக உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி