கரூர்: சேலையில் தீப்பிடித்து பெண் பரிதாப பலி

கரூர் மாவட்டம் பாகனத்தம் அருகே நொச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி பழனியம்மாள் (50). இவர் ஜூலை 27ஆம் தேதி காலை 9 மணி அளவில் அவரது வீட்டில் விறகு அடுப்பில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அடுப்பில் இருந்த தீ பழனியம்மாளின் சேலையில் பற்றி எரிந்தது. இதனால் அலறி அடித்து கூச்சலிட்டு கீழே விழுந்தார்.

இதற்குள்ளாக அவரது சேலையில் பற்றிய தீ அவரது உடலில் 50 சதவீதத்திற்கும் மேலாக தீக்காயங்களை ஏற்படுத்தியது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் (ஜூலை 29) உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பழனியம்மாள் கணவர் சுப்பிரமணி அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளியணை காவல்துறையினர் உயிரிழந்த பழனியம்மாளின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி