கரூர்: வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு; பரபரப்பு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவை சேர்ந்தவர் பாபு வயது (41). இவர் மார்ச் 20 ஆம் தேதி அதிகாலை 5:30 மணி அளவில், கரூர்-ஈரோடு சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துநகர் பிரிவு அருகே சென்ற போது, அதே சாலையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம், பாபு ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. 

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பாபுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த பாபுவின் மனைவி வேணி வயது (32) என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த பாபுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவகிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி