தகவலின் அடிப்படையில் டிசம்பர் 22ஆம் தேதி காலை 9:30 மணியிலிருந்து 10:30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் வெங்கமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள ராமன் மீன் கடை பின்புறம் சட்டவிரோத மது விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது.
சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 30) என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 27 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.