கரூரில் 3063 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கரூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்த 3063 நபர்களுக்கு இன்று ரூ. 9.74 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் வழங்கப்பட்டன. கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி