இவரது வாகனம் தென்னிலை பால்வார்பட்டி பிரிவு அருகே சென்றபோது, எதிர் திசையில் திருப்பூர் மாவட்டம், செட்டிபாளையம் பேங்க் காலனி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி வயது 69 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கொரியர் வேன், மாரிமுத்து ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த மாரிமுத்துவை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த மாரிமுத்துவின் மகன் பாஸ்கர் வயது 29 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சரக்கு வேனை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாலசுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல் துறையினர்.
ஒரு லிட்டர் ஆயில் கூட வெளியே வராது - அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை