கரூர்: டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து

தடா கோவில் பிரிவு அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து. வாலிபர் படுகாயம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, கலைவாணர் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் வயது 40. இவர் மே 31 ஆம் தேதி இரவு 10.20 மணியளவில் கரூர் திண்டுக்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட தடா கோவில் பிரிவு அருகே சென்றபோது, எதிர்திசையில் கர்நாடக மாநிலம், பெங்களூர், திருப்பாலையா பகுதியைச் சேர்ந்தவர் சாரதி வயது 43 என்பவர் வேகமாக ஓட்டிவந்த கார், காமராஜ் ஓட்டிய டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காமராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காமராஜ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சாரதி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி