கரூர்: டூ வீலர்களை களவாடிய இருவர் கைது; காவல்துறை நடவடிக்கை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, பள்ளப்பட்டி கிழக்குத் தெரு பகுதியில் கடந்த 11ம் தேதி அன்று இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் தனது வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். பிறகு வேலைக்கு செல்வதற்காக தனது வாகனத்தை பார்த்தபோது, இருசக்கர வாகனம் காணாமல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அக்கம் பக்கத்தாரிடம் தனது வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டார். ஆயினும் வாகனம் குறித்து எந்த தகவலும் கிடைக்கப் பெறாததால், இது தொடர்பாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பள்ளப்பட்டி கருத்தப்பா தெரு பகுதியைச் சேர்ந்த சர்புதீன் (52) மற்றும் செல்லுக்காடு பகுதி சார்ந்த அல்தாப் உசேன் (24) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. உடனடியாக இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி