தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் பொது மக்களுக்கு தர்பூசணி, இளநீர் போன்ற குளிர்பானங்களை வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வெயில் தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புங்கம்பாடி கார்னர் பகுதியில் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சதீஷ் ஏற்பாட்டில், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர், ஆரஞ்சு ஜூஸ் உள்ளிட்டவற்றை வழங்கினர். அதனை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் சேலைகள் வழங்கினர்.