இவர்களது வாகனம் அப்பகுதியில் உள்ள தேரப்பாடி பிரிவு ஆர்ச் அருகே சென்ற போது, அதே திசையில் தென்காசி மாவட்டம், ராமலிங்கபுரத்தை சேர்ந்த கணேஷ் வயது 31 ஓட்டி வந்த கார், இவருக்கு முன்னால் சென்ற கரூர், மேல பசுபதிபாளையத்தை சேர்ந்த முருகேசன் ஓட்டி சென்ற கார் மீது மோதியது. இதனால், கார் ஈஸ்வரன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஈஸ்வரனுக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். இவரது மனைவி சுமதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை கோவையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் அறிந்த ஈஸ்வரனின் சகோதரர் மாரிமுத்து (45) அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரவக்குறிச்சி காவல்துறையினர், ஈஸ்வரனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி, விபத்து ஏற்படும் வகையில் காரை ஓட்டிய கணேஷ், முருகேசன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.