கரூரில் திடீர்னு பிரேக் போட்ட பஸ்... கார் மோதி விபத்து

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், வேலாயுதம் நகர், 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (23). இவர் ஜூன் நான்காம் தேதி காலை 11.45 மணியளவில், கரூர் - திண்டுக்கல் சாலையில் அவரது காரில் அவரது தாயார் லட்சுமி உடன் சென்று கொண்டிருந்தார். இவரது கார் சீத்தப்பட்டி காலனி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, இவரது காரை முந்தி சென்ற தனியார் பேருந்து திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் பிரேக் இட்டதால், கார்த்திகேயன் ஓட்டி வந்த கார் தனியார் பேருந்து பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் காரில் பயணித்த அவரது தாயாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பேருந்தை சாலை விதிகளுக்கு புறம்பாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுனர் அரவக்குறிச்சி தாலுகா, சின்னாளப்பட்டியைச் சேர்ந்த லோகநாதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி