சின்னதாராபுரம் - அரசு கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்தார் செந்தில் பாலாஜி. கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் அரசு கால்நடை மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டுள்ளது. இன்று இந்த மருத்துவமனை திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையால் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திற்குள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருத்துவமனையை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர், கட்சி நிர்வாகிகள், மருத்துவர்கள், அரசுத்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.