அரவக்குறிச்சி: சாலையில் கார் மோதி ஒருவர் படுகாயம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த மேதர் முஹம்மது (49) என்பவர் புதன்கிழமை தனது ஸ்கூட்டியில் அரவக்குறிச்சி ஆறு ரோடு சர்வீஸ் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, அதே பாதையில் பின்னால் வந்த கார் ஒன்று மோதியதில் காயமடைந்தார். இந்த விபத்தில் மேதர் முஹம்மதுக்கு தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். அரவக்குறிச்சி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி