கரூர்: நிறுத்தி வைத்த வேன் மீது டூவீலர் மோதி ஒருவர் பலி

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் நொய்யல் குறுக்கு சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 72). அப்பகுதியில் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது டூவீலரில் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள முனி நாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சிக்னல் ஏதும் வெளிப்படுத்தாத நிலையில் சாலையில் நிறுத்தி வைத்திருந்த வேன் மீது எதிர்பாராத விதமாக டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. 

இதில் ராமசாமிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து ராமசாமி மகள் தாரணி (வயது 40) அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வேன் டிரைவர் கேரளாவைச் சேர்ந்த சிவதாசன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி