கரூர் மாவட்டம் குளித்தலையில், ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் 4 தளங்கள் மற்றும் 300 படுக்கை வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அவருடன் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவர் பூமிநாதன், நகர் மன்ற தலைவர் சகுந்தலா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.