கரூரில் சிசிடிவி களவாடிய நபர் கைது

கரூர் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள மனோகரா கார்னர் பகுதியில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் சிசிடிவி கேமரா மற்றும் டிவி.வி.ஆர்.கள் போக்குவரத்து நெரிசலை கண்காணிப்பதற்காகவும், குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காகவும் பொருத்தப்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கரூர் மனோகரா கார்னரில் வைக்கப்பட்டிருந்த 4 டி.வி.ஆர்.கள் மற்றும் 4 ஸ்விட்ச் பாக்ஸ்கள் களவாடப்பட்டிருந்தன. 

சம்பவம் குறித்து தனியார் நிறுவன மேலாளர் பிரசாத் (வயது 21) என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தில் ஆய்வு செய்த காவல்துறையினர், களவாடப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என மதிப்பீடு செய்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்ததில், கரூர் பாலமருதபட்டி பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் (வயது 42) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, மேற்கண்ட பொருட்களை அவர் களவாடியதாக ஒப்புக்கொண்டதன் பேரில் அவரை கரூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி