மலைக்கோவிலூர்: நடந்து சென்றவர் மீது கார் மோதி உயிரிழப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, நாகம்பள்ளியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 41). இவர் அக்டோபர் 5-ம் தேதி இரவு 11 மணி அளவில், மலைக்கோவிலூர் அருகே தகரக் கொட்டாய் என்னும் இடத்தில் திண்டுக்கல்- கரூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, எதிர் திசையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், வளையல்காரன் புதூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வேகமாக ஓட்டி வந்த ஹோண்டா சிட்டி கார், நடந்து சென்ற ராமசாமி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ராமசாமிக்கு தலை, இரண்டு கால்கள், மற்றும் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு ராமசாமியை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த ராமசாமியின் உறவினர் வெங்கடாபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகள் ஜெயக்கொடி என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த அரவக்குறிச்சி காவல் துறையினர் உயிரிழந்த ராமசாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, வேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய செந்தில்குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி