அரவக்குறிச்சியில் லாட்டரி விற்றவர் கைது

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா ஈசநத்தம் சந்தைப்பேட்டை அருகே, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த பாலசுப்பிரமணி (45) என்பவரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 55 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.3500 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி