இன்று அதிகாலை மங்கல இசை உடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில், இரண்டாம் கால பூஜை , துவார பூஜை , ஸ்பர்ஷாகுதி ,திரவிய ஹோமம், மகா பூர்ணகுதி, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள் எடுத்துச் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்தினர்.
இதனை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாதாரணை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் கும்பாபிஷேக விழா கமிட்டியினர் வழங்கினர்.