கரூர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் ரோந்துக்கு சென்ற காவலர்கள் அங்கு நின்றுகொண்டிருந்த இளைஞரின் கண்ணத்தில் அறைந்தனர். இதைப்பார்த்த இளைஞருடன் சென்றவர்கள் காவலர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு காவலர்கள் அவர் மது அருந்தியதாக கூறினர். மது அருந்தியாலும் எந்த தகராறிலும் ஈடுபடாமல் நின்றிருந்தவரை எப்படி அடிக்கலாம் என காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.