அய்யர்மலையில் 250 மீட்டர் திரி கொண்டு கார்த்திகை தீபம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ஸ்ரீ ரெத்தினகிரிஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, 1178 அடி உயரத்தில் 1017 படிக்கட்டுகளைக் கொண்ட மலை உச்சியில் 510 லிட்டர் தீப எண்ணெய், 240 கிலோ நெய், 250 மீட்டர் திரி கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும், அய்யர்மலை தெப்பக்குளம் மற்றும் கிரிவலப் பாதைகளில் ஆயிரக்கணக்கான அகல்விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி