க. பரமத்தியில் புதிய வகுப்பறை மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை திறந்து வைத்தார் செந்தில் பாலாஜி. கரூர் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை திறப்பு விழா இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, புதிய வகுப்பறை மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை ஆகிய இரண்டையும் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மேலும் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் கூடுதல் வகுப்பறையை பள்ளி மாணவியை விட்டு திறக்கச் செய்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ மற்றும் அரசு துறை அதிகாரிகள், பள்ளியில் பயிலும் மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.