வேலாயுதம்பாளையம்: வெற்றிலை விலைவீழ்ச்சி; விவசாயிகள் கவலை

வேலாயுதம்பாளையம்-விளைச்சல் அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி. விவசாயிகள் கவலை.தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் சுப காரியத்திலும், துக்க காரியத்திலும் வெற்றிலை தவிர்க்க முடியாத ஒரு பொருளாக உள்ளது.வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதியான புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புபாளையம், திருக்காடுதுறை, நொய்யல், மறவாபாளையம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடைபெறுகிறது.

இதில் வெள்ளைக்கொடி, கற்பூரி ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. 100 வெற்றிலைகள் ஒரு கவுளி எனவும், 104 கவுளி ஒரு சுமை என்ற கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது.உற்பத்தி செய்யப்படும் வெற்றிலைகள் வேலாயுதம்பாளையத்திலும், அருகில் உள்ள தினசரி மார்க்கெட்டிலும் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த வாரம் வெள்ளைக்கொடி இளம் பயிர் வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.12,000க்கும், கற்பூரி இளம் பயிர் வெற்றிலை ரூ.9,000க்கும், வெள்ளைக்கொடி முதிய பயிர் ரூ.9,000க்கும், கற்பூரி முதிய பயிர் ரூ.7,000க்கும் விற்பனையானது.நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் சுமை ரூ.10,000க்கும், கற்பூரி இளம்பயிர் வெற்றிலை ரூ.7,000க்கும், வெள்ளைக்கொடி முதிய பயிர் வெற்றிலை ரூ.8,000, கற்பூரி முதிய பயிர் வெற்றிலை ரூ.5,000க்கும் விற்பனையானது.உற்பத்தி அதிகமானதால் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி