பாப்பநாயக்கன்பட்டியில் சட்டவிரோத மது விற்பனை

அரவக்குறிச்சி அருகே பாப்பநாயக்கன்பட்டியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது குறித்து எஸ்ஐ ராஜசேர்வைக்கு கிடைத்த தகவலின் பேரில் ஜூன் 12ஆம் தேதி மாலை 6 மணி அளவில் பாப்பநாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட, அரவக்குறிச்சி தாலுகா, வேலம்பாடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (35) என்பவரை கைது செய்தனர். விற்பனைக்கு வைத்திருந்த 26 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து அவரை காவல் நிலைய பிணையில் விடுவித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி