திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த மகுடேஸ்வரன் (50) தனது மனைவி இந்திராணியுடன் கடந்த 3 ஆம் தேதி டிவிஎஸ் எக்ஸெல் வாகனத்தில் காமக்காப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வேல்முருகன் ஓட்டி வந்த கார் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகுடேஸ்வரனின் மகன் பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.