கரூர்: மணல் திருட்டு லாரியை மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர் (VIDEO)

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கரூரிலிருந்து வேலாயுதம்பாளையம் நோக்கி முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சேலம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். மண்மங்கலம் அருகே சென்றபோது அந்த வழியாக அனுமதி இன்றி மணல் அள்ளி வந்த லாரியை சுமார் 18 கிலோமீட்டர் தூரம் பின் தொடர்ந்து சென்று நாமக்கல் மாவட்ட எல்லை வேலூர் போலீஸ் சோதனைச் சாவடியில் மடக்கி பிடித்து சோதனை சாவடியில் இருந்த காவலர்களிடம் ஒப்படைத்தார். 

அவர்கள் கரூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் என்பதால் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பிறகு வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்திற்கு மணல் லாரியை கொண்டு வந்து காவல் துறை ஆய்வாளரிடம் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஒப்படைத்தனர். அங்கு அதிமுக நிர்வாகி சரவணன் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டதுடன், மீண்டும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம். ஆர். விஜயபாஸ்கர் புறப்பட்டுச் சென்று விட்டார். இதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மணல் லாரி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் பிடிபட்டது என்பதால் அந்த லாரியை போலீசார் பரமத்தி காவல் நிலைய போலீசாரை வரவழைத்து லாரியை ஒப்படைத்து அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி