சிறுமியுடன் கட்டாய உறவு; பிறந்த குழந்தை புதைப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தாய், 17 வயதுடைய மகள் ஆகியோர் வசித்து வந்துள்ளார். இவர்களது தோட்டத்தில், அரவக்குறிச்சி, அரங்கபாளையத்தை சேர்ந்த வீராச்சாமி (54), என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் திருமணம் ஆகி முதல் மனைவியை விவாகரத்து செய்து 2வது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.

தோட்டத்தில் வேலை பார்த்து வந்த பொழுது 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி ஒரு வருடத்திற்கு முன்பு தகாத உறவில் ஈடுபட்டு 2 முறை கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறுமி மீண்டும் கர்ப்பமானார். 7 மாத கர்ப்பிணியான சிறுமி கருக்கலைந்து குறை பிரசவத்தில் வீட்டில், பெண் குழந்தை பிறந்தது. இந்த பெண் குழந்தையை சிறுமியின் தாயார் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார்.

இந்நிவையில், வயிற்று வலியால் துடித்த மகளை, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உள் நோயாளியாக சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். மருத்துவர் சிறுமியை பரிசோதனை செய்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அமராவதி ஆற்றின் கரையில் புதைக்கப்பட்ட பெண் குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வீராச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்

தொடர்புடைய செய்தி