சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் 1, 70, 000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தை வந்தடைந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 1, 28, 000 கன அடி தண்ணீர் கரூர் மாவட்டத்தை கடந்து சென்று கொண்டுள்ளது. காவிரி ஆற்றை ஒட்டிய தவிட்டுப்பாளையம் கிராமத்தில் தாழ்வாக உள்ள ஒரு சில குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அவர்களை வீட்டை விட்டு வருவாய் துறை அதிகாரிகள் வெளியேற்றி அருகில் உள்ள சமுதாய கூடங்களில் தங்க வைத்துள்ளனர். தண்ணீர் வரத்து 1, 70, 000 கன அடி வரை வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளை அங்கு அமைக்கப்பட்டுள்ள 3 முகாம்களில் தங்க வைக்கவும், உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.