அப்போது, அப்பகுதியில் உள்ள செல்வராஜ் என்பவரது தோட்டத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்த அரவக்குறிச்சி தாலுக்கா, ராஜபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அக்னி, சின்ன தாராபுரம், எம்ஜிஆர் நகரை சேர்ந்த சுந்தரபாண்டியன், ராஜபுரம், ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த அஜித்குமார், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், அரவக்குறிச்சி தாலுக்கா, மீனாட்சி வலசு அருகில் உள்ள வடுகப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து, சேவல் சண்டை நடத்துவதற்காக வைத்திருந்த ரூபாய் ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.