கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ராஜூ நகரைச் சேர்ந்த சரவணன் (49) என்பவர் பூலாம்வலசு பிரிவு அருகே பைக்கை நிறுத்தி இயற்கை உபாதை கழித்தபோது, கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.300 பறித்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பள்ளபட்டியைச் சேர்ந்த லெனின் (29) என்பவர் மீது அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.