அரவக்குறிச்சியில் பைக்கை ஓட்டிச் சென்று விழுந்ததில் உயிரிழப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வேலன்செட்டியூரைச் சேர்ந்த 22 வயது சிவக்குமார், நேற்று (மே 30) தனது பைக்கில் சென்றபோது கீழே விழுந்து படுகாயமடைந்தார். அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிவக்குமாரின் சகோதரர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி