சின்னதாராபுரம் டி. வெங்கிடபுரம் பகுதியைச் சேர்ந்த பெஞ்சமின் (38) ஜூன் 3 பள்ளப்பாளையம் அருகே ஆனூர் பேருந்து நிறுத்தம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையிலும் காலிலும் பலத்த காயமடைந்த அவரை கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து அவரது தந்தை டேவிட் அளித்த புகாரின் பேரில் சின்னதாராபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.