கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் திருஈங்கோய்மலையில் உள்ள மரகதாசலேசுவரர் சுவாமி குளித்தலைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு கடம்பவனேஸ்வரருடன் சுவாமி சந்திப்பு மற்றும் தீபாரதனை நடைபெற்றது. பின்னர், காவிரி ஆற்றில் இரண்டு அஸ்திரிக தேவர்களுக்கு பூஜை செய்யப்பட்டு தீர்த்த வாரி நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.