கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரவக்குறிச்சி சட்ட மன்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி, முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் எம். ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.