இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்த கிருத்திகா கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதனிடையே நெய்வேலியைச் சேர்ந்த சிவா என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் கிருத்திகாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்தத் தகவல் அறிந்த கிருத்திகாவின் சகோதரர் தேவேந்திரன் கிருத்திகாவை சில நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனால் விரக்தி அடைந்த கிருத்திகா நேற்று முன்தினம் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.