இவரது வாகனம் தும்பிவாடி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, கரூர் மண்மங்கலம் அடுத்த ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் வயது 37 என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வேன், அல்லிமுத்து ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அல்லிமுத்துவை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பாக அல்லிமுத்து அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சரக்கு வேனை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்னதாராபுரம் காவல்துறையினர்.