இந்த நிலையில் நாதஸ்வரத்துடன் இஸ்லாமியர்கள் வீட்டிற்குச் சென்று அழைப்பு விடுத்தனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஷேக் அப்துல் காதர் தர்கா சந்தனக்கூடு 2-ம் நாள் இவர்கள் அவர்களுக்கு அழைப்பு விடுப்பர். இந்த பாரம்பரிய இஸ்லாமியர், இந்துக்கள் ஒற்றுமை கடந்த 300 ஆண்டுகளாக ஒவ்வொரு வாரிசாகக் கடைப்பிடித்து வருகின்றனர். இன்று பள்ளப்பட்டி பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சொட்டல் தெரு வழியாக சௌந்தராபுரம் பொதுமக்கள் அக்னி சட்டி எடுத்தல், அழகு குத்தி கோவில் பூசாரி அரிவாள் மேல் நின்றபடி ஊர்வலமாக வந்தனர். அப்பொழுது இஸ்லாமிய பெருமக்கள் அவர்களை பூ பழம் பொன்னாடை கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் ஊர்வலமாக கோவிலுக்குச் சென்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்