கரூர்: வாய்க்காலுக்கு குளிக்கச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

வாய்க்காலுக்கு குளிக்கச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் உள்பட இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை அருகே புஞ்சைப் புகழூரில் ஓடும் பாசன வாய்க்காலில் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி குளித்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.அப்போது, அதே கிராமத்தை சார்ந்த லிங்கேஸ்வரன் வயது (25) மற்றும் (15) வயது சிறுவன் ஆகிய இருவரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். அப்போது, சிறுமி சத்தமிட்டதால் அவர்கள் இருவரும் தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து சிறுமியின் தாய் க. பரமேஸ்வரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய லிங்கேஸ்வரன் மற்றும் 15 வயது சிறுவனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி