கரூர்: புகையிலை மூட்டை கடத்திய கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு

நாணப்பரப்பு அருகே புகையிலை மூட்டை கடத்தி வந்த கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு. தமிழகத்தில் போதை வஸ்துகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வட மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.இன்று அதிகாலை சேலம் - கரூர் பைபாஸ் சாலையில் அதிவேகமாக வந்த ஒரு கார் சாலையோர வழிகாட்டி கல் மீது மோதி விபத்தில் சிக்கி சுக்கு நூறாக உடைந்தது.அந்த காரில் 25 மூட்டைகள் ஹான்ஸ் மற்றும் கூல் லிப் புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது கண்டறிந்த பொதுமக்கள் வேலாயுதம்பாளையம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.மேலும் காரில் வந்தவர்கள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் சிக்கிய காரில் புகையிலை மூட்டைகள் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி