குளித்தலையில் கதண்டு கடித்து 7 பேர் படுகாயம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டுமருதூர் மங்கம்மாள் சாலையில் உள்ள தென்னந்தோப்பில் இருந்து வெளியேறிய கதண்டுகள், அந்த வழியாக சென்றவர்களை விரட்டி கடித்துள்ளது. இதில் காயமடைந்த மேட்டுமருதூரைச் சேர்ந்த விஜயசாந்தி (30), பொன்னீஸ்வரன் (18), விக்னேஷ் (33), சம்பத் (70), குமார் (55) மற்றும் கூடலூரைச் சேர்ந்த முத்து (65), முருகேசன் (60) என மொத்தம் 7 பேர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி