நல்லம்பட்டியில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது

நல்லம்பட்டியில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது. ரூபாய் 15,000 பறிமுதல். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட குடகனாறு செக் டேம் அருகில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூன் 15ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில், குடகனாறு செக் டேம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள நல்லம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவது விசாரணையில் தெரியவந்தது. 

உடனே சம்பவ இடத்துக்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட ஈசனத்தம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், பாகனத்தம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், பெரிய காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜ், வாளத்தூர் பகுதியைச் சேர்ந்த நடராஜ், லிங்கத்துப்பாறை பகுதியைச் சேர்ந்த சிவசுந்தரம், கரும்பரப்பு காலனி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், கொழுஞ்சிவாடி பகுதியைச் சேர்ந்த செந்தில், வடுகம்பாடி பகுதியைச் சேர்ந்த வடிவேல், வாத்துக்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிவேல், எரிமேடு பகுதியைச் சேர்ந்த காமராஜ் ஆகிய 10 பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 15,000-ஐயும் பறிமுதல் செய்தனர். பின்னர் பத்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி