கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்திற்கு விஜய்யின் பிரசார வாகனம் எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. அதனை சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, வருகிற ஜன.12 ஆம் தேதி விஜய் டெல்லியில் சிபிஐ அதிகாரிகளை நேரில் சந்திக்க இருக்கிறார்.