கரூர் விவகாரத்தில் CBI விசாரணைக்கு உத்தரவிட்டது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "மத்திய அரசு மற்றும் அதன் விசாரணை அமைப்புகள் தொடர்புள்ள முறைகேடுகளில் நீதிமன்ற மேற்பார்வையிலான விசாரணையை கோரி நீதிமன்றத்தை நாடும்போதெல்லாம் அந்தக் கோரிக்கைகள் மறுக்கப்படுகின்றன. ஆனால் எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் உயர் நீதிமன்றத்தால் SIT அமைக்கப்பட்ட போதும், அதற்கு மாற்றாக CBI விசாரணைக்கு உச்சநீதிம்னறம் உத்தரவிட்டுள்ளது.