கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் அரசின் விரிவான வாதங்களை கேட்காமல் CBI விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாக, அந்த உத்தரவைக் ரத்து செய்ய தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கூட்டநெரிசல் குறித்து அரசு அதிகாரிகள் பேசியதை காரணம் காட்டி CBI விசாரணைக்கு உத்தரவிட முடியாது; சட்டம்-ஒழுங்கு மாநில பட்டியலில் உள்ளதால் மக்களுக்கு விளக்கம் அளிக்கும் உரிமை மாநில அரசிற்கே உண்டு என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.